கோவையில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
கோவையில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சொல்லக்கூடிய அளவிற்கு மழை பெய்யவில்லை என்றே கூறலாம், மேலும் கோவையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் நேற்று வரை, சுமார், 113 மி.மீ., மழை பதிவு ஆகியுள்ளது, மேலும் இது, இந்த காலகட்டத்தில் பெய்திருக்க வேண்டிய மழையை காட்டிலும், 10 சதவீதம் குறைவான மழையாகும்.
இந்த நிலையில் சில நாட்களாகவே, கோவையின் புறநகர்பகுதிகளில், காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது,இதனால் வரும் நாட்களிலும் இதே காற்றின் வேகம் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
இந்நிலையில் கோவையில், இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், நாளை கோவையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.