வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- சென்னை வானிலை மையம்

Default Image

வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

ஜூன் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 18 செ.மீ மழை பதிவு, சென்னையில் இயல்பை விட 5 செ.மீ அதிகம் பெய்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்