இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.இந்த பருவமழை சில நாள்கள் மட்டுமே பெய்தது.அதன் பின் மீண்டும் வறண்ட வானிலை நீடித்த நிலையில் சில நாள்களாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
மேலும் நாளை ராமநாதப்புரம் , கன்னியாகுமரி ,தூத்துக்குடி மற்றும்நெல்லை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ,சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.