வெற்றியோ தோல்வியோ அத சரி சமமா பார்க்க கத்துக்கோங்க.. ஜி.வி.பிரகாஷ்.!
நேற்று தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், வெற்றியோ தோல்வியோ அத சரி சமமா பார்க்க கத்துக்கோங்க. தோல்வி இல்லாத லைப் இண்ட்ர்ஸ்ட்டா இருக்காது.
வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வரதுக்கு தோல்வி ரொம்ப முக்கியம். இந்த ஒரு பரிட்சைல தோத்தா, வாழ்க்கையில தோத்ததா அர்த்தம் இல்ல. வாழ்க்கை ரொம்ப பெருசு. தற்கொலை எதுக்குமே முடிவு கிடையாது என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெற்றியோ தோல்வியோ அத சரி சமமா பார்க்க கத்துக்கோங்க. தோல்வி இல்லாத லைப் இண்ட்ர்ஸ்ட்டா இருக்காது. வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வரதுக்கு தோல்வி ரொம்ப முக்கியம். இந்த ஒரு பரிட்சைல தோத்தா, வாழ்க்கையில தோத்ததா அர்த்தம் இல்ல. வாழ்க்கை ரொம்ப பெருசு.
தற்கொலை எதுக்குமே முடிவு கிடையாது. pic.twitter.com/z69JEdNQ4x
— G.V.Prakash Kumar (@gvprakash) September 13, 2020