சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா ? கனிமொழி ட்வீட்.!
இந்தியாவின் 12000 ஆண்டு பழமையான பாரம்பரியத்தை ஆய்வு செய்ய, சமீபத்தில் மத்திய கலாச்சாரம் சுற்றுலாத்துறைத்துறை ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவில் மொத்தம் 16 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இந்த குழுவில் ஒரு தென்னிந்தியர் கூட இடம்பெறவில்லை. இதனால், இந்த குழுவிற்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி தனது
ட்விட்டர் பக்கத்தில் மத்திய கலாச்சாரம் சுற்றுலாத் துறைத்துறை அமைத்த குழுவின் பட்டியலை வெளியிட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை ? சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா ? அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா ? என பதிவிட்டுள்ளார்.
இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை ?
சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா ? அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா ? pic.twitter.com/JuM2NtYNUV
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 15, 2020