கொரோனா குறைந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் – ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என கூறப்பட்டது; ஆனால், மெல்ல அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க மக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா குறைந்து விட்டது என்பதற்காக மாஸ்க் அணியாமல் இருக்க கூடாது. மக்கள் அச்சப்பட தேவையில்லை; கொரோனா அதிகம் இல்லாத மாவட்டங்களில் அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025