“அவரவர் துறையில் பாரதியாக முயல வேண்டும்” – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ..!
தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் மகாகவி நாளாக அனுசரிக்கப்படுகிறது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பாரதியாரின் பெருமையை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று,அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும்கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி ஆகும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்கிறார். அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும்கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி”,என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்கிறார். அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும்கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி.
— Kamal Haasan (@ikamalhaasan) September 11, 2021