கோயம்பேடு சந்தையை வேறு இடத்திற்கு மாற்றமா..? – சிஎம்டிஏ விளக்கம்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் , சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் காய்-கனி சந்தையை முழுமையாகவோ, பகுதியாகவோ திருமழிசைக்கு மாற்றி விட்டு, சந்தையை வணிக மையமாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை, கோயம்பேடு சந்தையை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் இல்லை. எதிர்கால வளர்ச்சி, வாகன நெரிசலை கருத்தில் கொண்டே முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என விளக்கமளித்துள்ளது.