எனக்கா ஓட்டு போட்ட? டென்ஷன் ஆன அமைச்சர் பொன்முடி..!
போதிய மருத்துவமனை இல்லை என முறையிட்ட மக்களிடம் எங்களுக்கு ஒட்டு போட்டியா? என கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இதனை வழங்குவதற்காக எக்கியார்குப்பம் கிராமத்திற்கு அமைச்சர் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது மீனவ கிராம மக்கள் போதிய மருத்துவமனை இல்லை என முறையிட்டனர். இதனையடுத்து, அமைச்சர் பொன்முடி எங்களுக்கு ஒட்டு போட்டியா? என கேள்வி கேட்டது சூழ்ந்திருந்த மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.