இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்., தங்களின் முடிவை கைவிட வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

Default Image

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்களின் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.

ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி (நாளை) முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அவர்களை அரசு அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், அரசுப் பேருந்துகள் இயங்காவிட்டால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் எனவும் கூறி, இந்த பாதிப்புகளை கருத்தில் கொண்டு, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்களின் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்