என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது நல்ல விஷயம்தான் – பிரேமலதா

- பிரியங்கா பாலியல் வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
- என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது நல்ல விஷயம்தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முகமது,சிவா , நவீன் , சென்ன கேசவலு ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.நேற்று குற்றவாளி 4 பேரையும் போலீசார் அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயன்றனர்.இதனால் போலீசார் தற்காப்புக்காக நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில்,ஐதராபாத்தில் பெண் கற்பழிப்பு விஷயத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது நல்ல விஷயம்தான் வரவேற்கத்தக்கது.இதேபோன்று தவறு செய்பவர்களை கடினமான தண்டனை குற்றவாளிகளுக்கு தர வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும். எங்களோடு கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். வெங்காயம் விலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025