முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி முத்து சரவணன் என்பவர் இன்று காலை தமிழக காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.
செங்குன்றம் அருகே பாரியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கிலும், நெல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்குகளில் காவல்துறையினாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறியப்பட்டவர் ரவுடி முத்து சரவணன்.
பாரியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய கற்றவாளியாக உள்ளவர் முத்து சரவணன். அவர் தலைமறைவாக இருந்தார். இவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அவர் இருக்கும் இடம் அறிந்து இன்று காலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சோழவரம் வண்டலூர் பூங்கா அருகே புதூர், மாரம்பேடு எனும் இடத்தில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
இதில் போலீசார் சுற்றி வளைத்த உடன் அங்கிருந்து தப்பிக்க காவல்துறையினரை நோக்கி முத்து சரவணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தற்காப்புக்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முத்து சரவணன் உயிரிழந்தார். மேலும், அவரது கூட்டாளியான சதீஷ் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
இதில் துப்பாக்கி குண்டு காயத்துடன் ரவுடி சதீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சதீஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த முத்து சரவணன், சதீஷின் உடல்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…