சற்று முன்…இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.1000 – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
மே 1 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவு சின்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். குறிப்பாக தொழிலாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் முதல்வர் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிவப்பு நிற ஆடை அணிந்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து,மே தின உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின்னர் முதல்வர் கூறியதாவது:”கட்டுமான தொழிலாளர்களின் திருமண உதவித்தொகை இதுவரை ஆண்களுக்கு ரூ.3000 மற்றும் பெண்களுக்கு ரூ.5000 ஆக இருந்த நிலையில்,இனி தொடர்ந்து அனைவருக்கும் ரூ.20,000 திருமண உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறோம், அமைப்பு சாரா தொழிலாளர்களின் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய குழந்தைகளுக்கு ரூ.1000 வழங்கக் கூடிய திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது ” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும்,தொழிலாளர்களை வாழ்த்தக்கூடிய அரசு மட்டுமல்ல, வாழ வைக்கக்கூடிய அரசு திமுக அரசுதான்,அந்த வகையில்,இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக அரசுதான் என்றும்,பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.