சற்று முன்…அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு நிபந்தனை ஜாமீன் – நீதிமன்றம் உத்தரவு!
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக இருந்த சரோஜா,சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.76 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்ததாக அவரது உறவினரான ராசிபுரத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து,காவல்துறையினர் சரோஜாவை கைது செய்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து,முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சரோஜா மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமின் மனுவை ஒத்தி வைத்திருந்தது.இதனையடுத்து,அவர் தலைமறைவாகினார்.
இந்நிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.இதனைத் தொடர்ந்து,அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி,நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.