தலைவராக நான் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்- தமிழிசை

- கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார்.
- தலைவராக நான் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம் அனுப்பினார் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவின் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமனம் செய்யப்பட்டார்.கடந்த 8-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை.ஆனால் இதன் பின்னரும் அவரது சொந்த மாநிலமான தமிழகத்துக்கு வந்து வந்து செல்கிறார்.
இந்நிலையில் கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் , தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேசுகையில், தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்ட போது ஜெயலலிதா தமக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
தமிழக பாஜக தலைவராக நான் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம் அனுப்பினார். சௌந்தரராஜன் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற மாற்று கட்சி தலைவர் நான் ஒருவராக தான் இருக்க முடியும் என்று பேசினார்.