கூட்டுறவு சங்க பதவிக்கான மசோதா காலாவதி.! ஆளுநர் செய்வது சரியல்ல.! அமைச்சர் பெரிய கருப்பன் வேதனை.!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் முக்கிய தீர்மானங்களுக்கு (மசோதா) ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது எந்த வகையில் சரியானது அல்ல. – அமைச்சர் பெரிய கருப்பன்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் பதவி காலத்தை 3 ஆண்டாக குறைப்பது தொடர்பான மசோத நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருந்தது. இதனை ஆளுநர் கையெழுத்திடாத காரணத்தால் அந்த மசோதா தற்போது காலாவதி ஆகியுள்ளது.
இது குறித்து, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறுகையில், கூட்டுறவு சங்க பதவி காலம் குறித்த மசோதா காலகெடு முடிந்ததால், தற்போது அந்த மசோதாவை திரும்ப பெற சட்டத்துறை மூலம் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். என கூறினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் முக்கிய தீர்மானங்களுக்கு (மசோதா) ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது எந்த வகையில் சரியானது அல்ல. எனவும், பதவி காலம் முடிந்த உடன் கூட்டுறவு பதவிகளுக்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.