நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திருச்சியில் கடைகள் திறப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திருச்சியில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், திருச்சியிலும் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதுவரை திருச்சியில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே குரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திருச்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதில் ஒன்றாக நாளை முதல் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திருச்சியில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்த கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.