இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி
இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது .
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தமிழக அரசும் , தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
ஆகவே தமிழகத்தில் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழு கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மற்றும் வணிக வளாகங்கள் இன்று முதல் இரவு 10 மணி வரை திறந்து அனுமதி வழங்கப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதற்கு முன் இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் , தற்போது 10 வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.