பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று வெறும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள நாளை மறுநாள் மட்டும் கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். மேலும் வணிகர்கள் தற்போதைய நிலையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக நேற்று இரவு வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது நாட்டின் நன்மைக்காக வரும் 22ஆம் தேதி ஊரடங்கை நாம் பின்பற்றுவோம் என்றும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவித்தார். இது 22 ம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிராக சோதனை ஓட்டமாக இருக்கும் என குறிப்பிட்டார்.
இதனை அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் போர்க்காலங்களில் இரவு நேரங்களில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு தெரிவித்தார். இந்த நிலையில் பிரதமர் கோரிக்கையை ஏற்று வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழக முழுவதும் உள்ள அனைத்து கடைகள், ஹோட்டல்கள் மூடப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…