தூத்துக்குடி shopping mall-லில் ரேசன் அரிசி மாவு.!அதிர்ச்சியில் மக்கள்…….!
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் சேது பாதை ரோட்டில் மாவு அரைக்கும் மில்லில் இருந்து ஒரு டன் எடை கொண்ட ரேசன் பச்சை அரிசியை பச்சரிசி மாவாக திரித்து பாக்கெட்களில் அடைத்து தரம் வாய்ந்த விலை உயர்ந்த மாவு பாக்கெட்டாக விற்றுவருவதாக தூத்துக்குடி வந்த குடோனை பறக்கும் படை தாசில்தார் சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மாவு அரைக்குக் மில்லில் சோதனையிட்ட போது அங்கு பச்சரிசியை மாவாக திரிர்து தரம் உயர்ந்த மாவு பாக்கெட்டாக விற்று வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அங்கு இருப்பில் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி மாவை கைப்பற்றிய உணவு கட்டுப்பாட்டு வாரியம் விசாரணை நடத்தி வருகின்றனர்.