கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு.? பாமகவினர் 55 பேர் கைது.!
கடலூரில் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர், நெய்வேலி நிலக்கரி சுரங்கமாக என்எல்சிக்கு சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலங்களை கையப்படுவதும் போது அங்குள்ள மக்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என கூறி பாமகவினர் மற்றும் அதிமுகவினர் , கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமக இன்று கடலூர் மாவட்டத்தில், என்எல்சி சுரங்கத்திற்கான நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.
இந்நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. மேலும் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.