மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.! தாக்குதலை தடுக்க மீனவர்கள் கோரிக்கை.!

- ராமேஸ்வர மீனவர்கள் இந்திய கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தமிழக மீனவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்திலிருந்து 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் 4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்திய கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது ஜேசு அலங்காரம் என்ற மீனவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் இலங்கை படையினர், தமிழக மீனவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி விரட்டியதோடு அவர்களிடம் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனைகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் காரணமாக ஏரளமான மீனவர்கள் அச்சத்தில் கரை திரும்பினர். பின்னர் காயமடைந்த நபரை மதுரை தனியார் கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து இலங்கை கடற்படையினர் மீது குற்றசாட்டியுள்ள ராமேஸ்வர மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அத்துடன் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க வேண்டு என்று வலியுறுத்தியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025