செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியை சார்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் குமார் ஆகியோர் கோவில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்துள்ளனர். அப்போது, திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது.
இதையடுத்து, லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டபோது ஒரு குண்டு காரிலும் மற்றொரு குண்டு ஸ்ரீனிவாசன் என்பவர் முதுகில் பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உட்பட 13 பேரும், எதிர்தரப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று எம்.எல்.ஏ இதயவர்மனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்பொழுது ,இதயவர்மனை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தாக்கல் செய்தது.இதனையடுத்து இதயவர்மனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்நிலையில் சம்பவம் நடத்த பகுதியான செங்காடுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர் காவல்த்துறையினர்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…