துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும் இடையே இருந்த நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் இதயவர்மனின் தந்தை லக்ஷ்மிபதி , குருநாதன், மனோகரன் ஆகிய மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.அப்பொழுது இதயவர்மன் குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.ஆனால் அந்த குண்டு அவ்வழியே சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் பாய்ந்து காயமடைந்தார்.இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
இந்நிலையில் இது குறித்து செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் கூறுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் எம்எல்ஏ மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…