திருப்போரூர் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும் இடையே இருந்த நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் ,அந்த சமயத்தில் இதயவர்மனின் தந்தை லக்ஷ்மிபதி , குருநாதன், மனோகரன் ஆகிய மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது .இதனால் ஆத்திரமடைந்த இதயவர்மன் குமாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார் .இதில் ஸ்ரீனிவாசன் என்பவர் குண்டு பாய்ந்து காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
எனவே இது குறித்து செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் கூறுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார் .மேலும் எம்எல்ஏ மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதனால் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எம்.எல்.ஏ இதயவர்மனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் .சென்னை போலீசாருடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.திருப்போரூர் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ கைது செய்யபப்ட்டுள்ளார்.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…