துப்பாக்கி சூடு – மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!
போலீசாரின் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு.
காவல்துறையினரின் துப்பாக்கிசூடு குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் ரவுடிகளை போலீசார் சுட்டுப்பிடித்தது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்கள் தப்பியபோது போலீசார் சுட்டுப்பிடித்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆணையத்தின் ஐ.ஜி விசாரணை நடத்தி 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆணைய தலைவர் ஆணையிட்டுள்ளார். நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.