துப்பாக்கி சூடு விவகாரம் – எம்எல்ஏ இதயவர்மன் நீதிமன்றத்தில் ஆஜர்

எம்.எல்.ஏ இதயவர்மனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியை சார்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் குமார் ஆகியோர் கோவில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்துள்ளனர். அப்போது, திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது.
இதையடுத்து, லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டபோது ஒரு குண்டு காரிலும் மற்றொரு குண்டு ஸ்ரீனிவாசன் என்பவர் முதுகில் பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உட்பட 13 பேரும், எதிர்தரப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏ இதயவர்மனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர். இதயவர்மனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தாக்கல் செய்துள்ளது.ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் காவலில் எடுக்க போலீசார் தீவிரமாகி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025