தந்தையின் வெற்றியை மேளதாளத்துடன் கொண்டாடிய மகன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.!
- திருப்பூரில், தந்தை வெற்றியைக் கொண்டாடிய மகன் மாரடைப்பால் உயிரிழப்பு.
- தந்தை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ட்ரம்ஸ், மேளம் தாளம் போன்றவைகளை கொண்டு தானே அடித்துக்கொண்டு போகும் போது மாரடைப்பு.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ,தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் உகாயனூர் ஊராட்சி பொள்ளி காளிபாளையம் கிராம பஞ்சாயத்தின் 5 வது வார்டில் சுப்பிரமணியம் என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். போட்டியிட்ட அவர் வெற்றியும் பெற்றார். சுப்பிரமணியனுக்கு கார்த்திக் என்ற 21 வயது மகன் உள்ளார். தந்தை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ட்ரம்ஸ், மேளம் தாளம் போன்றவைகளை கொண்டு அவரது தந்தைக்கு உற்சாக வரவேற்பு தரணும் என்று, இவரே அந்த மேளத்தை அடித்து கொண்டே தந்தைக்கு வரவேற்பு கொடுக்க வேண்டுமென்று சென்றுள்ளார்.
பின்னர் தந்தை வெற்றி பெற்ற செய்தியை கேட்டதும் ரொம்பவும் உற்சாகம் அடைந்து சந்தோஷத்தில் உடனடியாக தந்தையை பார்க்கணும் என்றும் அளவுக்கு அதிகமாக சந்தோஷத்தில் மேளம் அடித்து கொண்டு செல்லும்போது திடீரென மாரடைப்பால் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை பலனின்றி அங்கேயே பரிதாபமாக உயிரிந்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.