திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்-பேஸ்புக் லைவ்வில் தற்கொலை செய்து கொண்ட நபர்.!

Default Image

திருப்பூரில் ராம்குமார் பேஸ்புக்கில் லைவ்வாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாரப்புரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது மனைவி சுகாசினி மற்றும் மகனுடன் மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். டிரைவராக பணியாற்றி வரும் ராம் குமார், தனது மகனை தாராபுரத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டில் விட்டு வந்துள்ளார். ராம்குமாரின் மனைவி சுகாசினி அருகிலுள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்றைய தினம் ராம்குமார் தனது தந்தைக்கு கால் செய்து தனது மகனை பார்த்து கொள்ளுங்கள், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோவை ஆன் செய்து வைத்துள்ளார்.

அதனையடுத்து, பேஸ்புக் லைவ் போய் கொண்டிருக்கும் போதே ராம்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். லைவ்வில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த இந்த சம்பவத்தை பார்த்த நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து, சுகாசினி நேரில் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராம்குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மே‌ற்கொ‌ண்டதில், அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும், இந்த மானம் கெட்ட உலகத்தில் வாழ தனக்கு விருப்பம் இல்லை என்றும், யாரும் பீல் பண்ணாதீங்க என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் விசாரணையில் அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. பேஸ்புக்கில் லைவ்வாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்