#Shocking:22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது!
தமிழகத்தில் இளம்பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.அந்த வகையில்,விருதுநகர்,வேலூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்நிலையில்,தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.பொதுவாக, அவர் பணி முடித்து விட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் தனது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்த நிலையில்,கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த கொடியரசன் என்பவர் தான் அழைத்து சென்று வீட்டில் விடுவதாக கூறியுள்ளார்.
இளைஞர் ஏற்கனவே பழக்கமானவர் என்பதால் அப்பெண்ணும் நம்பி சென்றுள்ளார்.ஆனால்,சொந்த ஊருக்கு அழைத்து செல்லாமல் அப்பெண்ணை அருகில் உள்ள ஒரு புதர் காட்டுக்குள் அழைத்து சென்று தனது நண்பர்களான தமிழரசன்,சுகுமாரன்,கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கொடியரசன் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை வல்லம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வல்லம் டிஎஸ்பி பிருந்தா அவர்கள் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து,இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொடியரசன்,சுகுமாரன்,கண்ணன்,தமிழரசன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களின்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.எனினும்,தஞ்சையில் இளம்பெண் கூட்டுப்பாலியல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.