மர வேர்களுக்கு இடையில் கிடைத்த பச்சிளம் பெண் குழந்தை!அதிர்ச்சி அடைந்த மக்கள்!
நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பகுதியில் ஒரு குளம் ஒன்று உள்ளது.அந்த குளத்தின் கரையில் பனங்காடு உள்ளது.அப்பகுதியில் மக்கள் சென்று வரும் வழக்கம் உண்டு.அப்போது அப்பகுதியில் ஒரு குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.
அந்த வழியாக சென்றவர்கள், சுற்றுமுற்றும் பார்த்தபோது மரத்தின் வேர்களுக்கு இடையில் மச்சிளம் பெண் குழந்தை ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது.பிறந்து சிலமணிநேரம் மட்டுமே ஆன குழந்தையை பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாகவும் பரிசோதனைக்கு பின்னர் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக குழந்தையை வீசி சென்றனர்? என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.