“ஆட்சி கவிழ்கிறது “அரண்டு போன எடப்பாடி” “முக.ஸ்டாலின் , தினகரன் , கருணாஸ் கூட்டு..!!

Published by
Dinasuvadu desk

நடிகர் கருணாஸைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக  நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.Image result for KARUNAS TTV

நடிகர் கருணாஸ் சசிகலாவைச் சந்தித்த பிறகே இப்படி ஆக்ரோஷமாக பேசியுள்ளார் என்பது கவனிக்கதக்கது. அப்படி கருணாஸ் மனதில் என்ன இருக்கிறது ,சசிகலா வகுத்த திட்டம் என்ன , கருணாஸ்ஸிடம் கூறியது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறது அதிமுக.அதை வெளியே கொண்டு வர விசாரிப்பதற்கே போலீஸ் காவல் விசாரணை என்ற திட்டம்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டதில் பேசிய நடிகர் கருணாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை அதிகாரிகள்,நாடார் , வன்னியர் என கடுமையாகப் பேசினார்.இதற்கு நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிந்து கைது செய்தது காவல்துறை.இதில் நடிகர் கருணாஸ் கைதுக்குப் பிறகு முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும்  உன்னிப்பாகக் கவனித்து வருகிறது தமிழக காவல்துறை அரசின் உத்தரவுக்கிணங்க முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளின் செய்யும்  கந்துவட்டி, கலப்பட கருப்பட்டி என அனைத்து சட்டவிரோத தொழில்கள் நடவடிக்கை குறித்து கூர்ந்து கவனித்து வருகின்றனர் காவால்துறையினர்.நடிகர் கருணாஸ்க்கு ஆதரவாக பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள் யார்யார் என்றும் கவனிக்கிறார் எடப்பாடி.காரணம் சசிகலா திட்டம் எதாவது வெளி வருமா என்ற கோணத்தில் முதல்வர் எடப்பாடி அணுகுகிறார்.நடிகர் கருணாஸ் பேச்சு குறித்து நடிகர் கருணாஸ்  சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர், நடிகர் கருணாஸ் மீதான நடவடிக்கை சரியானதுதான். முட்டாள்தனமாகப் பேசி, மற்ற சமூகங்களின் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டார் என்றும் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த பிறகுதான் நடிகர் கருணாஸ் பேச்சில் இந்த மாற்றம் என்றும் யூகிக்கிறார்.நடிகர் கருணாஸ் பேச்சில் நாடார் , வன்னியர் என  இரண்டு சமூகங்களை விமர்சித்துப் பேசினார். காரணம், முதல்வர் பதவிக்கு சசிகலா வராமல் போனதற்குக் காரணம் ஆடிட்டர் குருமூர்த்தியும் சசிகலா புஷ்பாவும் தான். அதனால்தான், இந்த இரண்டு பேரின் சமூகங்களையும் விமர்சித்தார் என்று நம்மால் சொல்ல முடியும். நடிகர் கருணாஸ் பேசியதில்  எந்த இடத்திலும் மத்திய அரசை அவர் விமர்சிக்கவில்லை.   இப்போது அதிமுகவை கைப்பற்றி  முழு அதிகாரமும் எடப்பாடி பழனிசாமியின் சமூகம் பக்கம் போய்விட்ட ஆத்திரமும் அவரின் பேச்சில் வந்த வார்த்தைகளாக வெளிப்பட்டது. காரணம் தொடக்கத்தில் அமைதியாக தான் நடிகர்  கருணாஸ் பேசினார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பகைத்துக் கொண்ட நடிகர் கருணாஸ் திமுக  ஸ்டாலின் நடத்திய மாதிரி சட்டமன்றத்தில் கலந்து கொண்டார்.தற்போது தமிழக அரசியல் என்பது தி.மு.கவுக்கும் அண்ணா தி.மு.கவுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் , விமர்சன சண்டை நடந்து கொண்டு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணமே  நடிகர் கருணாஸ் வாயில் இருந்து வார்த்தையாக வந்தது.எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என்றால் திமுக ஸ்டாலின் மிகவும் அவசியம். தினகரனும் ஸ்டாலினும் இணையாவிட்டால் இந்த  ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. இதன் தொடர்ச்சியாகத்தான், கருணாஸுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். இந்த அரசியல் ஆட்டங்களைப் புரிந்துகொண்ட பிறகுதான், கருணாஸைப் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தமிழக காவல்துறை.
ஆனால் கருணாஸ்ஸை  போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்க முடியாது’ என நீதிமன்றம் கூறி வழக்கை   தள்ளுபடி செய்துவிட்டது.நீதிமன்றத்தின் இந்த உத்தரவு  எட்டப்பாடிக்கு எதிராக ஸ்டாலின் ,சசிகலா ,தினகரன் , கருணாஸ் தொடங்கிய இந்த கூட்டணியின்  முதல் வெற்றி என பார்க்கப்படுகிறது.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

19 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

28 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

3 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago