அதிர்ச்சி : 2 மாதத்திற்கு முன் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி..!
சங்கரன்கோவில் அருகே 2 மாதத்திற்கு முன் இருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் அதிர்ச்சி.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சங்கரன்கோவில், தென்காசி அருகே கூலித்தொழிலாளியான மாரியப்பன் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி முதல்தவனை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்த கடந்த அக்.8-ஆம் தேதி அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து, நேற்று மாரியப்பனின் மகன் மாரிச்செல்வத்தின் தொலைபேசிக்கு அவரது தந்தை 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியை, அவர் 2-வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சான்றிதழ் இருந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.