நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்தவரை பொது மக்கள் சரமறிய அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தை சேர்ந்த தனம் என்பவரின் கணவர் இறந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்தார். ஏற்கனவே திருமணமான மூன்றாவது மகளான விஜயா தர்மபுரியே சேர்ந்த சாமுவேல் என்பவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயாவின் சகோதரி வசந்தி மீது சாமுவேல் ஆசைப்பட்டு வந்தார். இதற்கு விஜயா எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சாமுவேல் தனத்தின் வீட்டிற்கு ஆசிட் மற்றும் கத்தியுடன் சென்றார். அங்கு தனத்திற்கும் சாமுவேலுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்து தனத்தை காப்பாற்ற அப்பகுதி மக்கள் முயற்சித்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசாரும் சாமுவேலை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் தனத்தின் மீது ஆசிட் ஊற்றி வெட்டி கொலை செய்த சாமிவேல் பொதுமக்கள் மீதும் ஆசிட் வீசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் சாமுவேலை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சாமுவேல் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தனம் மற்றும் சாமுவேல் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் ஆசிட் பட்டு 10-ற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்த அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…