நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வருவதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் இரு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமைக்ரான் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் தொற்று உறுதியான நபரோடு விமானத்தில் வந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரையில், இதுவரை 10 மாநிலங்களில், 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…