சென்னை: ஐபிஎல் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் கொடுத்த ஷாக் நியூஸ்.!

Default Image

சென்னையில் சி.எஸ்.கே. அணி விளையாடும் நாட்களில் மட்டும், போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ள. மேலும், இரவு போட்டி முடிந்த பின், கூடுதலாக 90 நிமிடங்கள் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போக, ஏப்ரல் 3ம் தேதி முதல் சென்னையில் உள்ள ஐந்து மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நந்தனம், வடபழனி, விம்கோ நகர், சென்ட்ரல் எம்ஜிஆர், திருமங்கலம் ரயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மெட்ரோ ரயில் பயணிகளின் நலனுக்காக உட்கார வசதியுடன் கூடிய மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாம். அந்த போட்டிகளைப் பார்ப்பதற்கு தனிக் கட்டணம் ஏதுமில்ல எனவும் சாதாரண மெட்ரோ பயணத்திற்கும், அந்த நிலையங்களில் ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் தங்குவதற்கும் மட்டுமே கட்டணம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்