இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் காலமானார்.
இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் சென்னையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவர் 1961-ஆம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். அந்த மையத்தின் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியைத் தொடர்ந்த அவர், மனநலம் பாதித்தவர்கள் மேம்பாட்டிற்காக 1984-இல் ‘ஸ்கார்ப்’ என்னும் சேவை நிறுவனத்தை தோற்றுவித்தார்.
இதனையடுத்து 1992-ஆம் ஆண்டு மனநலம் பாதித்தவர்களுக்கான அவரது சேவையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. 2016 ஆம் ஆண்டிற்குரிய அவ்வையார் விருதை தமிழக அரசு அவருக்கு வழங்கி சிறப்பித்தது.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக காலமான சாரதா மேனனின் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…