#Breaking:”கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால்,ஊதியம் கிடையாது” – மின்சார வாரிய அதிரடி உத்தரவு!

Default Image

மதுரை:கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி.

மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,அவ்வாறு தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்றும் மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

“மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா  தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் 07.12.2021-க்குள் செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த 26.11.2021 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவரால் அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையை தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்பிக்க அறிவுறுத்தும்படி அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள்/ மதுரை மண்டலம் அலுர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இது குறித்த விரிவான அறிக்கையினை 07.12.2021 சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay