அதிர்ச்சி : மீன் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு..!
சென்னை, அம்பத்தூர் அருகே மீன்தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.
சென்னை, அம்பத்தூர் அருகே வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர்கள் யுவராஜ் – கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மீனாட்சி என்ற குழந்தை உள்ளது.
இந்த குழந்தை, கையில் வைத்திருந்த விளையாட்டு பொருள், அவர்களது வீட்டில் இருந்த மீன் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. அதனை எடுக்க சென்ற குழந்தை மீனாட்சி மீன் தொட்டிக்குள் தலைகீழாக விழுந்துள்ளார். குழந்தை விழுந்து சிறிது நேரம் கழித்து தான் குழந்தையின் தாய் வீட்டிற்குள் வந்து பார்த்துள்ளார்.
அப்போது, குழந்தை தலைகீழாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் கௌசல்யா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மீன்தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.