அதிர்ச்சி…இத்தனை லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவில்லை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

Default Image

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே மாதம் 5 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில்,கடந்த மே 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.இந்நிலையில்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்கள்,11 ஆம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்கள்,12 ஆம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்கள் என மொத்தம் 6,79,467 மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு,தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே,10,12-ஆம் வகுப்பு மாணவர்கள் 17 லட்சம் பேர் எழுதிய 1.87 கோடி விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கிய நிலையில்,வரும் ஜூன் 23-ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், 17-ஆம் தேதி 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,ஜூன் 9 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்