அதிர்ச்சி..! சென்னையில் தண்ணீர் லாரி மோதி 5ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு..!
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி 5ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயுடன் 2 சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக தடுமாறிய நிலையில் சிறுமி கீழே விழுந்துள்ளார். இதில் லாரி சிறுமி மீது ஏறி இறங்கியுள்ளது. லாரி ட்ரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.