சென்னை மதுரவாயலில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்.
சென்னை மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று இரவு சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசித்து வந்த சுரேஷ் என்ற இளைஞர் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி கத்தியதை பார்த்து பயந்துபோன அந்த கொடூரன் சிறுமியின் உடலை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து வெளியே சென்ற சிறுமி வீட்டிற்குள் வராததால் அவரது பெற்றோர் சந்தேகமடைந்து அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் சிறுமி கீழே விழுந்து ரத்தம் வடிந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்த சென்ட்ரிங் தொழிலாளியான சுரேஷை கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…