பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா.! விசாரணைக்கு தடை கேட்டு வழக்கு .! மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம்.!
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி நிர்வாகியாக பொறுப்பில் இருந்த சிவசங்கர் பாபா மீது அங்கு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் இவர் மீது பாலியல் புகார் அளித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த புகார்கள் பதியப்பட்டன.
இந்த புகாரின் பெயரில் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது 8க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் என இவர்மீதான வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றன.
இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்குகள் மீது விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். அதில், வெளிநாட்டில் இருந்து மின்னஞ்சல் மூலம் ஒரு மாணவி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நம்பகத்தன்மையில்லை என கூறி சிவசங்கர் பாபா தரப்பு வாதிட்டது.
அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, விசரணையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. மேலும், அடுத்த நீதிமன்ற விசாரணைக்கு புகார் அளித்த மாணவியை காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் செப்டம்பர் 15ஆம் தேத்திக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.