திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பத்திரிகை, கல்வி, இலக்கியம் போன்றவைகளில் சிறந்த சேவை ஆற்றிய மறைந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கலச்சிலை மற்றும் நூலகம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, மணிமண்டபத்தையும், சிவந்தி ஆதித்தனாரின் சிலையையும் திறந்து வைத்தார். அவரது சிலைக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த மணிமண்டபத்தில் நூலகம் மற்றும் பூங்காவும் அமைந்துள்ளது. அங்குள்ள நூலகத்திற்கு சென்று முதல்வரும், துணை முதலவரும் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…