கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு சிவாஜிகணேசன் நிலைதான் – கமலை சாடிய முதலமைச்சர் பழனிசாமி
சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும் என்று நடிகர் கமல்ஹாசனை சாடியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர் .
சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல்.
அரசியல் குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அடிப்படையே தெரியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் . 2 தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.