சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் – துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை!
சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
மறைந்த பிரபலமான தமிழ் திரைப்பட நடிகரும், ரசிகர்களால் நடிகர் திலகம் என புகழப்படுபவருமாகிய சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் இன்று. இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று சென்னை அடையாறு மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இந்த நிகழ்வில் துணை முதல்வருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா க. பாண்டியராஜன், பா. வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பேரனும், நடிகருமான விக்ரம் பிரபு ஆகிய பலரும் பங்கேற்றுள்ளனர்.