மொட்டையடித்து நூதன போராட்டம்.! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு.!
- நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தேவேந்திரர், பள்ளர், குடும்பர், காலாடி என 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி 100 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்தவித அறிவிப்புகளும் வெளியிடாததைக் கண்டித்து தாமிரபரணி நதிக்கரையில் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அரை நிர்வாணத்தோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க போலீசார் அனுமதி வழங்கினர்.