மதுரையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் – மதுரை ஆட்சியர்

Default Image

மதுரையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மதுரை ஆட்சியர் உத்தரவு.

மதுரையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், பேருந்துகளின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு உருவாக்கபட்டுள்ளதாகவும் மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் 21-12-2021 அன்று மாலை நடைபெற்றது.

மதுரை மாநகரில் தற்போது பெர்மிட் பெற்று இயக்கும் ஷேர் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி செல்வது பயணிகள் அமரும் உள்கட்டமைப்புகளை விதிகளுக்கு மாறாக மாற்றி வாகனங்களை இயக்கும் பட்சத்தில் அவ்வகை ஆட்டோக்களை பறிமுதல் செய்வதுடன் பெரிமிட் ரத்து செய்ய சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அரசு பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி / கல்லுாரி மாணவர்களை சிறப்பு குழு அமைத்து அவர்களை கண்காணித்து, அம்மாதிரி விதி மீறும் மாணவர்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க அறிவுரைகள் வழங்கி அவ்வாறான செயலில் எதிர்காலங்களில் ஈடுபடாவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு தொடர்பான நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்த புகார்களின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் பிறதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்