வழிகாட்டி பலகை விழுந்து உயிரிழந்த சண்முகசுந்தரம்..! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

Default Image

சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் அறிவிப்பு. 

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து கத்திப்பாராவில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி தூண் மீது மோதி ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சண்முகசுந்தரம் என்கிற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணமும் அறிவித்துள்ளார். அதன்படி, போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.1 லட்சமும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்