வெட்கக்கேடான விஷயம்… தமிழகமே தலைகுனிகிறது- தமிழக பாஜக துணைத்தலைவர் காட்டம்.!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து, ஏமாற்றியவருக்கு ஏன் இவ்வளவு ஆதரவு என தமிழக பாஜக துணைத்தலைவர் காட்டம் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையின் 18 மணிநேர சோதனை நடவடிக்கைக்கு பிறகு தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது நெஞ்சவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, செந்தில் பாலாஜியின் கைது குறித்து, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். சாதாரண மக்களிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி லஞ்சம் வாங்கி ஏமாற்றிய ஒருவருக்கு ஆதரவு அளித்து வருவது வெட்கமாக இல்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகமே தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறது, தமிழக முதலமைச்சர் தனது கட்சியினரை சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வைக்கவேண்டும். மேலும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
— Narayanan Thirupathy (@narayanantbjp) June 14, 2023